அமெரிக்க கடவுச்சீட்டில் தனது படத்தை சேர்க்க ட்ரம்ப் திட்டம்
29 சித்திரை 2026 புதன் 10:14 | பார்வைகள் : 432
அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டுகளில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் அச்சிடப்படவுள்ளது.
அரசாங்க நிறுவனங்களில் தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்கும் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், இந்த 'லிமிடெட் எடிஷன்' கடவுச்சீட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, சுதந்திரப் பிரகடனத்தின் பின்னணியில் ட்ரம்ப்பின் உத்தியோகபூர்வ படம் இடம்பெறும். அதன் கீழே அவரது கையெழுத்து தங்க நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். மற்றுமொரு பக்கத்தில் அமெரிக்காவை உருவாக்கிய முன்னோடிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட வகை கடவுச்சீட்டுகள் வொஷிங்டனில் உள்ள அலுவலகங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும், இதற்கு மேலதிக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விண்ணப்பதாரர்கள் இந்த விசேட பதிப்பை நிராகரிக்க முடியுமா என்பது தொடர்பில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
பொதுவாக ஜனநாயக நாடுகளில் பதவியில் இருக்கும் தலைவர்களின் படங்கள் கடவுச்சீட்டுகளில் இடம்பெறுவது மிகவும் அரிதானது. வழக்கமாக வரலாற்றுச் சின்னங்கள் அல்லது இயற்கை காட்சிகளே கடவுச்சீட்டுகளில் அச்சிடப்படும்.
கடந்த மாதம் அமெரிக்க டொலர் நாணயத்தாள்களிலும் கையெழுத்தை அச்சிட ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
வொஷிங்டனில் உள்ள பல முக்கிய அரச கட்டிடங்களில் ட்ரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
பிரித்தானியா போன்ற நாடுகளில் மன்னரின் உருவம் நாணயங்களில் இடம்பெறுவது வழக்கம் என்றாலும், அரசியலில் நேரடியாக ஈடுபடும் ஒரு ஜனாதிபதி தனது படத்தை இவ்வாறான முக்கிய ஆவணங்களில் பதிப்பது அமெரிக்க அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை நேற்று சந்தித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan