பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை: நிதின் கட்கரி
29 சித்திரை 2026 புதன் 09:19 | பார்வைகள் : 138
வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் கிடையாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த மாநாட்டில் நிதின் கட்கரி பேசியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலமே இல்லை. வாகன உற்பத்தியாளர்களுக்கு உயிரி எரிபொருட்கள், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கி திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகிய அம்சங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த போக்குவரத்துக்கான முன்னோடித் திட்டங்களை அரசு ஏற்கனவே துவங்கி விட்டது. 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் லாரிகள் மற்றும் பஸ்களை இயக்கி வருகிறோம். ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தின் எரிபொருள்.
அதேபோல முக்கிய எரிபொருளாக எத்தனாலும் திகழ்கிறது. இதனால், மூலப்பொருட்களில் இருந்து எத்தனாலை இந்தியா உற்பத்தி செய்கிறது. வாகனங்கள் எத்தனால் 20 எரிபொருளில், இயக்கப்படுகின்றன. இது நாளைக்கு நாள் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan