Paristamil Navigation Paristamil advert login

ரஜினி படத்தில் விமல் நடிக்கிறாரா?

ரஜினி படத்தில் விமல் நடிக்கிறாரா?

28 சித்திரை 2026 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 1862


நடிகர் ரஜினிகாந்தை இன்று விமல் சந்தித்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம், ரஜினி படத்தில் விமல் நடிக்கிறாரா அல்லது விமல் வேற ஏதாவது சந்தோஷமான செய்திக்காக ரஜினிகாந்தை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினாரா? என்ன நடந்தது என்று பலரும் தெரியாமல் தவித்தனர்.

இது குறித்து விமல் தரப்பில் விசாரித்தால், இது திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல தற்செயலான சந்திப்பு. சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் ஜெயிலர் 2 வுக்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிம்புத்தேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தது. இதை கேள்விப்பட்டு நடிகர் விமல் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினியும் தனது வழக்கமான் அன்பு பாணியில் கட்டி அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், அந்த போட்டோ வைரலானது. விமல் ஹேப்பி. விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம் பற்றிய விரிவான தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள்.