கிரேக்கத் தலைநகரில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு - பலர் காயம்
28 சித்திரை 2026 செவ்வாய் 16:10 | பார்வைகள் : 176
கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் இரண்டு இடங்களில் 28.04.2026 செவ்வாய்க்கிழமை வயோதிபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அலுவலகம் மற்றும் நீதிமன்றக் கட்டிடம் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 89 வயதுடைய வயோதிபர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செய்தி சேவை
முதலில் ஏதென்ஸின் மையப்பகுதியிலுள்ள தேசிய சமூக பாதுகாப்பு நிதி அலுவலகத்திற்குள் நுழைந்த அந்த வயோதிபர், அங்கிருந்த ஊழியர் ஒருவரை குனியுமாறு சத்தமிட்டுவிட்டு, மற்றுமொரு ஊழியரின் காலில் சுட்டுள்ளார்.
முதியவர் ஒரு நீண்ட கோட் அணிந்து அதனுள் துப்பாக்கியை மறைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்து தப்பிச் சென்ற அவர், சிறிது நேரத்தில் ஏதென்ஸின் மற்றொரு பகுதியிலுள்ள நீதிமன்றக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், அந்த வயோதிபர் சில ஆவணங்கள் அடங்கிய உரைகளை தரையில் வீசியெறிந்துள்ளார்.
அந்த ஆவணங்களில் உள்ள விடயங்களே தனது செயலுக்கான காரணம் என அவர் குறிப்பிட்டதாகத் தெரியவருகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தப்பியோடிய அந்த வயோதிபரைப் பிடிக்க ஏதென்ஸ் முழுவதும் பாரிய பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறைகள் மிகக் குறைவாகக் காணப்படும் நாடுகளில் ஒன்றான கிரேக்கத்தில், பட்டப்பகலில் ஒரு முதியவர் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan