வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட் - புதிய செயலி
27 சித்திரை 2026 திங்கள் 15:04 | பார்வைகள் : 187
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெசேஜிங் சேவைகளுக்காக மட்டும் இந்த எக்ஸ் சேட் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெசேஜ் செயலி பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் எனவும், பயனர்களின் தனிப்பட்ட உரையாடலை நிறுவனம் உள்பட மூன்றாம் தரப்பால் பயன்படுத்த முடியாது எனவும், விளம்பரங்கள் மற்றும் பயனர்களை கண்காணிக்கும் எந்த டிராக்கிங் அம்சமும் இதில் இருக்காது, தொலைபேசி எண்கள் இல்லாமல் ஏற்கனவே உள்ள எக்ஸ் கணக்கை வைத்தே லாக் இன் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
ஆடியோ மற்றும் வீடியோ வசதி உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த செயலி விரைவில் ஆண்ட்ராய்டுகளுக்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுஞ்செய்தி அனுப்பும் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ் அப்புக்கு கடும் சவாலாக இந்த செயலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan