Paristamil Navigation Paristamil advert login

H-1B விசா முறையில் அதிரடி மாற்றம் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

H-1B விசா முறையில் அதிரடி மாற்றம் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

26 சித்திரை 2026 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 250


அமெரிக்காவில் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் H-1B விசா முறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர "End H-1B Visa Abuse Act of 2026" என்ற புதிய மசோதாவை குடியரசு கட்சி உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

H-1B விசாக்களை வழங்குவதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்த மசோதா பரிந்துரைக்கிறது.

ஆண்டுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 65,000-லிருந்து 25,000-ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

லாட்டரி முறையை ரத்து செய்துவிட்டு, அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியமாக ஆண்டுக்கு சுமார் ரூ.1.67 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசா வைத்திருப்பவர்கள் குடும்பத்தினரை அழைத்து வரத் தடை, OPT திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் கிரீன் கார்டு பெறுவதைத் தடுத்தல் போன்ற கடுமையான விதிகள் இதில் உள்ளன.

இந்த மசோதா சட்டமானால், அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் ஆயிரக்கணக்கான இந்திய மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.