தொழில்நுட்ப துறையை ஆட்கொள்ளும் AI! 2026-ல் மட்டும் 96000 ஊழியர்கள் பணி நீக்கம்
25 சித்திரை 2026 சனி 20:37 | பார்வைகள் : 1705
AI தொழில்நுட்பத்தால் கிட்டத்தட்ட 96000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணிகளுக்கு மனித ஆட்களை விட AI தொழில்நுட்பத்தை அதிகமாக நம்ப தொடங்கியுள்ளனர்.
தொடக்க நிலை ஐடி நிறுவனங்கள், 250 ஊழியர்கள் செய்யும் வேலையை AI உதவியுடன் வெறும் 50 ஊழியர்களுடன் தற்போது செய்து வருகின்றன.
இதற்கிடையில் பெரு நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தை பரவலாக பயன்படுத்த தொடங்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கில் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 10% ஊழியர்களை அதாவது 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணி நீக்கம் மே 20 திகதி முதல் தொடங்கும் என்றும், காலியான 6000 பணியிடங்களை நிரப்பும் திட்டமும் இல்லை என்று மெட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம், கடந்த அக்டோபரில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
51 ஆண்டு கால வரலாற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முதல் முறையாக கிட்டத்தட்ட 8750 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.
தரவுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 92,000 க்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan