பயங்கரவாத குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது !!
24 சித்திரை 2026 வெள்ளி 17:07 | பார்வைகள் : 2495
Rhône பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவர், பயங்கரவாத நோக்கத்துடன் வன்முறைச் செயலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Parquet national antiterroriste (Pnat) தெரிவித்ததின்படி, குறித்த சிறுவன் “பயங்கரவாத நோக்கத்துடன் குற்றவாளிகள் குழுவில் பங்கேற்பது” என்ற குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். இந்த வழக்கிற்கான ஆரம்ப விசாரணை ஏப்ரல் 11ம் திகதி தொடங்கப்பட்டு, Direction générale de la sécurité intérieure (DGSI) வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், யூத அல்லது சமபாலின சமூகங்களை இலக்காகக் கொண்டு வன்முறைச் செயலை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.விசாரணையின் போது, குறித்த சிறுவன் தன்னை “தியாகியாக இறக்க விரும்பியதாக” ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களின் வயது குறைந்து வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் Olivier Christen எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய வழக்குகளில் சிறுவர்கள் அதிக அளவில் இடம்பெறுவது கவலைக்குரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan