எலான் மஸ்குடன் கைகோர்த்த இந்திய AI விஞ்ஞானி - யார் இந்த தேவேந்திர சிங் சாப்லோட்..?
15 பங்குனி 2026 ஞாயிறு 14:23 | பார்வைகள் : 1377
இந்திய AI விஞ்ஞானியான தேவேந்திர சிங் சாப்லோட், எலான் மஸ்க் xAI நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X-யின் செயற்கை நுண்ணறிவு பிரிவான xAI தளத்தில் இந்திய AI விஞ்ஞானியான தேவேந்திர சிங் சாப்லோட் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய AI விஞ்ஞானியான தேவேந்திர சிங் சாப்லோட் X தளத்தில் எலான் மஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சூப்பர் இன்டலிஜென்ஸ்-ஐ உருவாக்கும் இலக்கோடு xAI தளத்தில் இணைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேவேந்திர சிங் சாப்லோட் இந்த X தளப் பதிவை எலான் மஸ்க் பதிலளித்து வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் பாம்பே ஐஐடி-யில் கணினி அறிவியலில் பி.டெக் படிப்பை முடித்த தேவேந்திர சிங் சாப்லோட், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் இணைந்து மெஷின் லேர்னிங் துறையில் PhD பட்டம் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றிய தேவேந்திர சிங் சாப்லோட், பின் மெட்டா நிறுவனத்தின் AI பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
Mistral AI என்ற பிரான்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மல்டி மோடல் ஆராய்ச்சி குழுவிற்கு தலைமை தாங்கிய தேவேந்திர சிங், சக்திவாய்ந்த “மிஸ்ட்ரல் 7பி” உருவாக்க மிகப்பெரிய பணியாற்றினார்.
இந்நிலையில் தற்போது தேவேந்திர சிங் xAI தளத்தின் தொழில்நுட்ப பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
தேவேந்திர சிங் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிகளுக்காக பேஸ்புக் நிறுவனத்தின் பெல்லோஷிப் உள்ளிட்ட பல அங்கீகாரத்திற்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan