Paristamil Navigation Paristamil advert login

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்

14 பங்குனி 2026 சனி 14:44 | பார்வைகள் : 280


சிரியாவிலிருந்து ஜேர்மனிக்கு அகதியாக வந்த இளம்பெண்ணொருவர், 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜேர்மனி பட்டத்தை வென்றுள்ளார்.

சிரியாவில் பிறந்த ரோஸ் மாண்டி (Rose Mondy, 26) சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது குடும்பம் சிரியா உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி ஜேர்மனிக்கு வந்தது.

ஜேர்மனியிலுள்ள Ruhr என்னுமிடத்தில் வளர்ந்த ரோஸ், ஒரு சமூக ஊடகப் பிரபலம் ஆவார்.    

2024ஆம் ஆண்டிலும் மிஸ் ஜேர்மனி போட்டியில் பங்கேற்றார் ரோஸ். இறுதிச் சுற்றுவரை வந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேறினார்.

தனது முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ரோஸ், மீண்டும் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றதுடன், மிஸ் ஜேர்மனி பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.