Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு வீரர் உயிரிழப்பு: பதற்றத்திற்கு மத்தியில் அமைதியை வலியுறுத்தும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!!

பிரெஞ்சு வீரர் உயிரிழப்பு: பதற்றத்திற்கு மத்தியில் அமைதியை வலியுறுத்தும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!!

14 பங்குனி 2026 சனி 07:45 | பார்வைகள் : 823


ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில் உருவான பதற்றமான சூழ்நிலையிலும், பிரான்ஸ் அமைதியுடனும் உறுதியுடனும் செயல்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்  தெரிவித்துள்ளார்.

 பரிஸ் நகரில், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன்னிலையில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். பிரான்ஸ் தனது கூட்டாளிகளிடம் நம்பகத்தன்மையுடன் இருந்து, நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதோடு தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதியாக காக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 மத்திய கிழக்கு போர்நிலைக்கு எதிராக பிரான்சின் நிலைப்பாடு முழுமையாக பாதுகாப்பு நோக்கமுடையதாகும் என்றும், எந்த நாட்டுடனும் பிரான்ஸ் "போர் நடத்தவில்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், குர்திஸ்தான் பகுதியில் (ஈராக்) பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாத மீளுருவாக்கத்தை எதிர்த்து சர்வதேச கூட்டணியின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த பிரெஞ்சு படையினரை தாக்கிய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஈராக் பிரதமருடன் விரைவில் கலந்துரையாட உள்ளதாகவும் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, பிரெஞ்சு வீரர் உயிரிழந்ததையடுத்து பதிலடி நடவடிக்கை குறித்து எந்தவொரு கருதுகோள்களையும் தற்போது விவாதிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.