Paristamil Navigation Paristamil advert login

தெற்கு லெபனானின் சிடோன் நகரின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

 தெற்கு லெபனானின்  சிடோன் நகரின் மீது  இஸ்ரேல் வான் தாக்குதல்

14 பங்குனி 2026 சனி 04:14 | பார்வைகள் : 1219


இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான்மீது கடந்த மாதம் போர் தாக்குதலை மேற்கொண்டது, இந்நிலையில் ஈரானும் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

தெற்கு லெபனானின் சிடோன் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் 13.03.2026  நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனான் சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என தேசிய செய்தி நிறுவனத்தை (NNA) மேற்கோள் காட்டி அல்ஜெஸீரா இந்த செய்தியை தெரிவித்துள்ளது.

லெபனானின் மூன்றாவது பெரிய நகரமான சிடோனின் கிழக்கு புறநகர்ப் பகுதியான 'அல்-புவார்' (al-Fouar) என்ற இடத்தில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த வான் தாக்குதலால் குறித்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதோடு, மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்