Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை? அமைச்சர் விளக்கம்

இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை? அமைச்சர் விளக்கம்

12 பங்குனி 2026 வியாழன் 16:13 | பார்வைகள் : 1311


 

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு  முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தியைப் பாதுகாத்துக்கொண்டு மக்கள் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

எரிவாயு சேமிப்பு நிலையமொன்றை நிர்மாணிக்கவும், சப்புகஸ்கந்த மற்றும் முத்துராஜவெல எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கவும், அதேபோல் திருகோணமலையில் உள்ள பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக உலகச் சந்தையில் விலை அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பை நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி உட்பட மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலை மாறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்