Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் அறிமுகமான Xiaomi 17 Ultra, Xiaomi 17

 இந்தியாவில் அறிமுகமான Xiaomi 17 Ultra, Xiaomi 17

12 பங்குனி 2026 வியாழன் 15:40 | பார்வைகள் : 194


Xiaomi நிறுவனம்  (மார்ச் 11) இந்தியாவில் தனது புதிய Xiaomi 17 Ultra மற்றும் Xiaomi 17 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொடர், ஜேர்மன் லென்ஸ் தயாரிப்பாளர் Leica-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட மேம்பட்ட camera அமைப்புடன் வருகிறது.

Xiaomi 17 Ultra 6.9 இன்ச் LTPO AMOLED திரை, 120Hz refresh rate, 3,500 nits brightness, 6,000 mAh பேட்டரி, 90W wired மற்றும் 50W wireless சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

1-inch LOFIC main sensor, 200MP periscope telephoto lens, 50MP ultrawide lens மற்றும் 50MP front camera ஆகியவை இதில் உள்ளன.

அதேபோல், Xiaomi 17 6.3 அங்குல LTPO AMOLED திரை, 6,300 mAh பேட்டரி, 100W wired மற்றும் 50W wireless சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

50MP main, 50MP periscope telephoto, 50MP ultrawide மற்றும் 50MP front camera ஆகியவை இதில் உள்ளன.

இரண்டு மொடல்களும் Snapdragon 8 Elite Gen 5 processor மற்றும் Xiaomi HyperOS 3.5 இயங்குதளத்துடன் வருகின்றன. Xiaomi 17 Ultra விலை ரூ.1,29,999 மற்றும் Xiaomi 17 விலை ரூ.89,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 18 முதல் Amazon, Xiaomi ஓன்லைன் மற்றும் ரீட்டெயில் கடைகளில் கிடைக்கும். 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026