Paristamil Navigation Paristamil advert login

2026 IPL - முதற்கட்ட போட்டி அட்டவனை வெளியானது - CSK போட்டிகள் எப்போது?

2026 IPL - முதற்கட்ட போட்டி அட்டவனை வெளியானது - CSK போட்டிகள் எப்போது?

12 பங்குனி 2026 வியாழன் 15:37 | பார்வைகள் : 203


2026 IPL தொடருக்கான முதறகட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.  

18 ஐபிஎல் தொடர்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 19வது ஐபிஎல் தொடருக்கான முதற் கட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் திகதி வெளியான பின்னர் மீதமுள்ள அட்டவணை அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

முதல் போட்டி, மார்ச் 29 ஆம் திகதி, பெங்களூருவில் எம். சின்னசாமி மைதானத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோத உள்ளது.

பிற்பகல் போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 03:30 மணிக்கும், மாலை போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 07:30 மணிக்கும் தொடங்கும். 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

மார்ச் 30 ஆம் திகதி கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஏப்ரல் 3 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியையும், ஏப்ரல் 5 ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஏப்ரல் 11 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026