Paristamil Navigation Paristamil advert login

சாய் அபயங்கர் சம்பளம் இத்தனை கோடியா?

சாய் அபயங்கர்  சம்பளம் இத்தனை கோடியா?

11 பங்குனி 2026 புதன் 15:13 | பார்வைகள் : 185


சாய் அபயங்கர் தனது 20 வயதிலேயே தென்னிந்தியத் திரையுலகில் இசையமைப்பாளராக மிக விரைவான வளர்ச்சியையும், கோடிக்கணக்கான சம்பளத்தையும் பெற்று சாதனை படைத்து வருகிறார். பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய், தனது சிறு வயது முதலே இசை மற்றும் தயாரிப்பில் திறமை பெற்று, தற்போது 20 வயதிலேயே முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். 'பால்டி' திரைப்படம் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகவுள்ளது . மலையாள சினிமா வரலாற்றில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் சாய்க்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 20 வயதான இசைக்கலைஞரின் படத்திற்கான சம்பளம் இரண்டு கோடிக்கு மேல் என்று குறிப்பிட்டார். "பால்டி படத்திற்காக சாயின் சம்பளம் ரூ. 2 கோடிக்கு மேல், இது மலையாள சினிமா இதுவரை ஒரு இசை இயக்குனருக்கு வழங்கிய அதிகபட்ச சம்பளம்" என்று அவர் கூறினார்.

2கே கிட்ஸ்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அபயங்கர் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தார். இதுவரையில் யாரும் உபயோகப்படுத்தாத வரிகளும் இசைகளும் ரசிகர்களுக்கு புது புத்துணர்ச்சியை அளிக்கிறது. அவரது ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். வித்யாசமான புது புது அனுபவங்களை வைத்து சாய் பாடல்களை எழுதி அதற்கு ஏற்ற நடனங்களும் இருக்கும். பாடலுக்கு ஏற்ற பேக்ரவுண்ட் செட்டப்பும் இருக்கும். ஒவ்வொரு ஆல்பம் சாங் இருக்கும் ஒவ்வொரு ஹீரோயியை தேடி பிடிப்பவர் சாய் அபயங்கர்.

பிரதீப் ரங்கநாதனை வைத்து கீர்த்தீஸ்வரன் இயக்கும் படம் Dude. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்திற்கும், சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.2 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்திற்கு முதலில் இசையமைக்க இருந்தது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். இதையடுத்து இந்த படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட் ஆனார். கருப்பு பணத்திற்கு சாய் அபயங்கர் 3 கோடி சம்பளம் ஏற்றதாக சொல்லப்படுகிறது.

அதிக சம்பளம் வரும் சாய் அபயங்கர்: இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். 'பால்டி' திரைப்படம் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகவுள்ளது . மலையாள சினிமா வரலாற்றில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் சாய்க்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 20 வயதான இசைக்கலைஞரின் படத்திற்கான சம்பளம் இரண்டு கோடிக்கு மேல் என்று குறிப்பிட்டார். "பால்டி படத்திற்காக சாயின் சம்பளம் ரூ. 2 கோடிக்கு மேல், இது மலையாள சினிமா இதுவரை ஒரு இசை இயக்குனருக்கு வழங்கிய அதிகபட்ச சம்பளம்" என்று அவர் கூறினார்.

சிம்பு , வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்படத்திற்கும், சிம்புவை வைத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கும் அரசன் படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ்ஜின் தயாரிப்பில் உருவாகி வரும் படம், பென்ஸ். ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக வருகிறார். இதுவும் LCU கதைகளுள் ஒன்றாகும். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன், குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரின் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் நடைப்பெற்று வருவதை ஒட்டி, இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது

ஆல்பம் மூலம் 2கே கிட்ஸ்களின் மனதில் நீங்கா முதல் இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் நாம் சாய் அபயங்கர். இவர் இந்த சிறு வயதிலேயே இசையில் பல திறமைகளை வைத்துக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் தனது தனித்திருமியை முளைத்துள்ளார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக மாறிவிடுகிறது. இவர் சினிமாத்துறையில் தனக்கு தனி இடத்தை பதிக்க போராடி வருகிறார். இவர் ஒரு பாடலுக்கு இரண்டு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது ஒரு புதுமுக அதுவும் சிறுவயதிலேயே இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு இசை அமைப்பாளர் என்றால் அது நம் சாய் அபயங்கர் தான்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026