Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த ஈரானியர்கள் உடல்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

 இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த ஈரானியர்கள் உடல்களை ஒப்படைக்குமாறு  உத்தரவு

11 பங்குனி 2026 புதன் 15:15 | பார்வைகள் : 1404


இலங்கையில் காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிரூட்டப்பட்ட சேமிப்பு அலகுகளில்  84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையிலுள்ள ஈரானியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி மேலதிக நீதவான் சமீர தொடங்கொடவினால் 11.03.2026 காலை இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை ஈரானியத் தூதரகப் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்குமாறு காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

காலி துறைமுகக் காவல்துறையினரால் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையினைத் தொடர்ந்தே இந்தச் சட்டப்பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகளிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை ஈரானுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.