6-1 என்ற கணக்கில் அடலாண்டாவை நொறுக்கிய பாயெர்ன்! இரட்டை கோல் அடித்த ஓலிஸ்
11 பங்குனி 2026 புதன் 12:53 | பார்வைகள் : 1046
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 6-1 என்ற கோல் கணக்கில் அடலாண்டாவை வீழ்த்தியது.
பெர்காமோவின் Gewiss மைதானத்தில் நடந்த யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாயெர்ன் முனிச் மற்றும் அடலாண்டா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே பாயெர்னின் ஜோஸிப் ஸ்டானிஸிக் கோல் அடிக்க, அடுத்த 10 நிமிடங்களில் சக அணி வீரரான மைக்கேல் ஓலிஸ் கோல் அடித்தார்.
இதில் இருந்து அடலாண்டா சுதாரிப்பதற்குள் 25வது நிமிடத்திலேயே செர்ஜ் ஞாப்ரே மிரட்டலாக கோல் அடித்தார்.
இதன்மூலம் பாயெர்ன் முனிச் அணி முதல் பாதியில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பின்னரான இரண்டாம் பாதியிலும் பாயெர்ன் அணியின் ஆதிக்கமே தொடர்ந்து, நிக்கோலஸ் ஜாக்சன் 52வது நிமிடத்திலும், மைக்கேல் ஓலிஸ் (Michael Olise) 64வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர்.
அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே இளம் வீரர் முசியாலா (67வது நிமிடம்) கோல் அடித்து எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஒற்றை கோல் அடிக்க அடலாண்டா அணி போராடிய நிலையில், 90+3வது நிமிடத்தில் மரியோ பசாலிக் (Mario Pasalic) மூலம் கோல் கிடைத்தது.
எனினும், பாயெர்ன் முனிச் (Bayern Munich) அணி 6-1 என்ற கோல் கணக்கில் மிரட்டலான வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan