Paristamil Navigation Paristamil advert login

T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ்

T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ்

11 பங்குனி 2026 புதன் 08:56 | பார்வைகள் : 290


இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் திருமணம் மார்ச் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது.

2026 T20 உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெற்றிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான குல்தீப் யாதவிற்கு, கடந்த 2025 ஜூன் 4 அன்று, தனது நீண்டகால தோழியான வன்ஷிகா என்பவருடன் லக்னோவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வன்ஷிகா LIC நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரே இவர்களின் திருமணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குல்தீப் யாதவ் T20 உலக கிண்ணத்திற்கான அணியில் இடம் பிடித்ததால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

2026 T20 உலக கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ள நிலையில், வரும் மார்ச் 14 ஆம் திகதி உத்தரகாண்டின் முசௌரியில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து, மார்ச் 17 ஆம் திகதி லக்னோவின் ஹோட்டல் சென்ட்ரம்-மில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிசிசிஐ அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026