நான் இருக்கும் வரை தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஸ்டாலின்
10 பங்குனி 2026 செவ்வாய் 10:14 | பார்வைகள் : 175
நான் இருக்கும் வரை, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியால் வெற்றி பெற முடியாது, என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் நடந்த தி.மு.க.,வின், 12வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த தேர்தலுக்கு முன், இதே இடத்தில் நடந்த மாநாட்டில், ஏழு இலக்குகளை அறிவித்தோம். அந்த ஏழு இலக்குகளையும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றி உள்ளோம்.
தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு கூட, தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலம் என்று சொல்கிறது. அந்தளவுக்கு நாம் கெத்தா முன்னேறி உள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியுடன், நம் ஆட்சியை ஒப்பிடும் போது, பல மடங்கு அதிகம் செய்துள்ளோம்.
நம் திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, இலவச மகளிர் பஸ் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும், யாராலும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது. தி.மு.க., அரசால் பயனடைந்தவர்கள் ஓட்டு போட்டாலே போதும்; வெற்றி உறுதி.
தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை 'டாப் - அப்' செய்து, மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கின்றன. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டங்கள் தான். நான் இருக்கும் வரை தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி, வெற்றி பெற முடியாது
தமிழகத்துக்கு எதையும் செய்யாமல், எந்த நம்பிக்கையில் தே.ஜ., கூட்டணியினர் ஓட்டு கேட்டு வருகின்றனர் என தெரியவில்லை. இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது தமிழக அணியா, டில்லி அணியா என்பது தான்.
தமிழகத்தை எப்படியாவது காவி மயம் ஆக்கிவிடலாம் என திட்டம் போடுகின்றனர். கருப்பு - சிவப்பு கூட்டம் இருக்கும் வரை, யார் அப்பன் வந்தாலும் அது நடக்காது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சுயநலத்துக்காக அ.தி.முக.,வை பா.ஜ.,விடம் அடகு வைத்து விட்டார். அ.தி.மு.க.,வை அழிக்கும் வேலையை பா.ஜ., செய்கிறது.
பீஹாரில் நிதிஷ்குமாரை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, காரியம் முடிந்ததும், தற்போது பா.ஜ.,வை ஆட்சியில் அமர வைக்க உள்ளனர். உதயசூரியன் சின்னம் வெற்றி பெறுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, கூட்டணி கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் தி.மு.க.,வினர் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan