மத்திய தரைக்கடலை வந்தடைந்தது சாள்-து-கோல் போர்க்கப்பல்!!
6 பங்குனி 2026 வெள்ளி 16:19 | பார்வைகள் : 2333
உலகின் மிகச் சிறந்த போர்க்கப்பல்களில் ஒன்றான சாள்-து-கோல் கப்பல் மத்திய தரைக்கடலை வந்தடைந்துள்ளது.
போர் விமானங்களை தாங்கும் குறித்த கப்பல் கடந்த சில நாட்களாக ஸ்வீடன் நாட்டின் கடற்பரப்பில் தரித்து நின்றிருந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்தத்தை அடுத்து, குறித்த கப்பல் மத்திய தரைக்கடலுக்கு அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதை அடுத்து, இன்று மார்ச் 6, வெள்ளிக்கிழமை நண்பகல், மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியை அது வந்தடைந்தது.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் "சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக" நடத்தப்படுகிறது என்று நம்பும் இம்மானுவேல் மக்ரோன், செவ்வாயன்று பிரான்ஸ் "கண்டிப்பாக தற்காப்பு" நிலையில் இருப்பதாக வலியுறுத்தினார். அதன் ஒரு அங்கமாகவே சாள்-து-கோல் அங்கு நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan