காசு கொடுத்து பெறும் வெற்றி இழிவானது; அடித்து சொல்கிறார் சீமான்
7 பங்குனி 2026 சனி 06:54 | பார்வைகள் : 1367
ஓட்டுக்களை விலை கொடுத்து வருகின்றனர். காசு கொடுத்து பெறும் வெற்றி இழிவானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: கேரளாவில் இருந்து நம் எல்லையை காக்க நாங்கள் போராடுகிறோம். நமது மலையை அவர்கள் வெட்டி எடுத்து செல்கின்றனர். அவர்கள் இங்கே கொண்டு வந்து குப்பையை கொட்டுகின்றனர். எல்லையை சுற்றி நாம் நிறைய இழந்து கொண்டு இருக்கிறோம். அதனை சரி செய்ய தான் நான் இருக்கிறேன்.
இழிவானது
ஓட்டுக்களை விலை கொடுத்து வருகின்றனர். காசு கொடுத்து பெறும் வெற்றி இழிவானது. ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு பணநாயகம் வந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என்று கேட்கும் நிலை வந்துள்ளது.
எந்தவொரு அரசு, நாடு சட்டம் ஒழுங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறதோ, அப்படி இருக்கும் மக்களின் நலனின் அக்கறை காட்ட முடியாது. சட்டம் ஒழுங்கு என்பது அடிப்படை. அதனையே சரி செய்ய முடியவில்லை என்றால் மக்கள் நலனில் என்ன செய்வீர்கள்? சாதாரணமாக கொலை செய்துவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது.
நல்ல ஆட்சி
இங்கு கொலைக்கு அதிகபட்ச தண்டனை 90 நாட்கள் தானே. உரிய சான்றுடன் குற்றம் நிரூபிக்கபடாத காரணத்தால் குற்றவாளிகள் வெளியே வந்துவிடுவார்கள். சட்டம் இருக்கிறது. அது நடைமுறைப் படுத்தவில்லை என்பதால் குற்றங்கள் பெருகி கொண்டே செல்கிறது.
நல்ல ஆட்சி என்பது சொல்லில் தான் இருக்கிறது. செயலில் இல்லை. மாநில உரிமைகளை பறி கொடுத்தவர்களே மாநில உரிமை பற்றி பேசி வருகின்றனர். தமிழகத்தில் சினிமா என்பது மதம் போன்று ஆகிவிட்டது. அரசு விழாவில் திரைத்துறையினர் ஏன்? இவ்வாறு சீமான் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan