Paristamil Navigation Paristamil advert login

மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் - இங்கிலாந்து கேப்டன் வருத்தம்

மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் - இங்கிலாந்து கேப்டன் வருத்தம்

6 பங்குனி 2026 வெள்ளி 11:17 | பார்வைகள் : 1188


அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சனின் கேட்சை தவறவிட்டு, மிகப்பெரிய வருத்தத்தை இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் தெரிவித்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.  

முதலில் ஆடிய இந்தியா 253 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 246 ஓட்டங்கள் எடுக்க, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் விளாசினார்.

முன்னதாக அவர் 15 ஓட்டங்களில் இருந்தபோது அடித்த ஷாட்டை, இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி ப்ரூக் (Harry Brook) கேட்ச் செய்ய தவறிவிட்டார்.  

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஹாரி ப்ரூக், "நான் ஒரு பெரிய தவறு செய்தேன் என்று கூறுவேன்; சாம்சனை வீழ்த்த என் கைகளை மேலே உயர்த்தியிருக்க வேண்டும். கேட்ச்கள் போட்டிகளை வெல்லும், இல்லையா? துரதிர்ஷ்டவசமாக, அது என் கைகளில் நிற்கவில்லை வெளிப்படையாக, அது மனதில் உள்ளது.

நான் ஸ்கோர்போர்டை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவர் ஓட்டங்களைக் குவித்துக் கொண்டிருந்தார். 'இன்றிரவு நான் 89 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்' என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.