Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு போர்: லெபனானில் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் முயற்சி!!

மத்திய கிழக்கு போர்: லெபனானில் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் முயற்சி!!

5 பங்குனி 2026 வியாழன் 19:33 | பார்வைகள் : 510


மத்திய கிழக்கில் லெபனானில் மீண்டும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசி நிலைமையைப் பற்றி ஆலோசித்தார். 

ஹெஸ்பொல்லா மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் சண்டைகள் தொடங்கியுள்ளன. போரைக் நிறுத்துவதற்காக மக்ரோன் பல நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார். அவர் டொனால்ட் டிரம்ப்புடனும் பேசினார். அதேபோல், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் உரையாடி, இரு தரப்பும் போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹெஸ்பொல்லா இஸ்ரேலுக்கு ராக்கெட் ஏவியதற்கு பதிலாக, இஸ்ரேல் லெபனானில் குண்டுவீச்சுகளை அதிகரித்து தெற்கு பகுதியில் தரைப்படை தாக்குதலையும் நடத்தியது. இந்த மோதல்களில் இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 90,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026