Paristamil Navigation Paristamil advert login

போர் பதட்டத்துக்கு நடுவே - மத்திய கிழக்கில் இருந்து பிரான்சுக்கு விமானசேவை!!

போர் பதட்டத்துக்கு நடுவே - மத்திய கிழக்கில் இருந்து பிரான்சுக்கு விமானசேவை!!

5 பங்குனி 2026 வியாழன் 18:12 | பார்வைகள் : 3138


மத்திய கிழக்கில் குண்டு மழைகளுக்கு நடுவே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து பிரான்சுக்கு விமானம் ஒன்று புறப்பட உள்ளது.

வரும் மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பெய்ரூட்டில் இருந்து குறித்த விமானம் புறப்பட உள்ளது. லெபனாலில் சிக்கிக்கொண்டுள்ள ஐரோப்பியர்களை ஏற்றிக்கொண்டு குறித்த விமானம் புறப்பட உள்ளதாகவும், சாள்-து-கோல் விமான நிலையத்தில் காலை 9.40 மணிக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவழி பயணத்துக்கு 671 அமெரிக்க டொலர்கள் கட்டணம்  எனவும், பயணச்சிட்டைகள் முழுவதும் விற்றுத்தீர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானம் பெய்ரூட் நகரின் தெற்கு புறநகரில் உள்ள சிறிய விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.