Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் இருந்து பிரெஞ்சு குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்: தேவைப்பட்டால் இராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படும்!!

மத்திய கிழக்கில் இருந்து பிரெஞ்சு குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்: தேவைப்பட்டால் இராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படும்!!

5 பங்குனி 2026 வியாழன் 14:11 | பார்வைகள் : 1584


மத்திய கிழக்கில் நடைபெறும் பதற்றமான சூழ்நிலையில், இஸ்ரேல்-அமெரிக்கா ஈரானை தாக்கியதற்கு ஆறு நாட்கள் கழித்து, அங்கு இருந்த 205 பிரெஞ்சு குடிமக்கள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் (Charm el-Cheikh) நகரிலிருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை பானரிஸுக்கு மீளக் கொண்டு வரப்பட்டனர். 

அவர்கள் பெரும்பாலும் இஸ்ரேலில் இருந்தவர்கள் என அரசின் பேச்சாளர் Maud Bregeon தெரிவித்தார். அடுத்த நாட்களிலும் மேலும் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் Catherine Vautrin இன்று ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து கூடுதல் விமானங்கள் புறப்படும் என்று கூறினார். 

மிகவும் பாதிக்கப்படக்கூடிய அல்லது உதவி தேவைப்படும் பிரெஞ்சு குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய கிழக்கில் தற்போது சுமார் 400,000 பிரெஞ்சு குடிமக்கள் இருப்பதாக அரசு கூறுகிறது. “திரும்ப விரும்பும் அனைத்து பிரெஞ்சு குடிமக்களும் பாதுகாப்பான முறையில் திரும்புவார்கள்” என்று அரசு உறுதி அளித்துள்ளது. 

தற்போது பொதுவான விமானங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தேவையெனில் இராணுவ விமானங்களையும் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்