Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு குடிமக்கள் எவ்வாறு நாடு திரும்புகின்றனர்? செலவுகளை யார் ஏற்கின்றனர்?

பிரெஞ்சு குடிமக்கள் எவ்வாறு நாடு திரும்புகின்றனர்? செலவுகளை யார் ஏற்கின்றனர்?

4 பங்குனி 2026 புதன் 16:26 | பார்வைகள் : 1858


மத்திய கிழக்கில் சிக்கித் தவித்திருந்த பிரெஞ்சு குடிமக்களை நாடு திரும்பச் செய்ய அரசு ஏற்பாடு செய்த முதல் சிறப்பு விமானம் நேற்று இரவு பரிஸ் சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து, விமானப் போக்குவரத்து அசாதாரணமாக இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் சிரமமாகியுள்ளன.

மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட இந்த முதல் விமானத்தில், மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. துபாயில் இருந்தவர்கள் மஸ்கட்டுக்கு பத்து மணி நேர சாலைப் பயணம் செய்து இந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏறியிருந்தனர்.

பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளிற்கான அமைச்சர் (ministre déléguée chargée de la Francophonie) எலியோனோர் காருவா (Éléonore Caroit), இந்த விமானங்களுக்கான இருக்கைகள் பிரெஞ்சு குடிமக்கள் சாதாரணமாக செலுத்த வேண்டிய விலையை விட குறைந்த விலையில் வழங்கப்பட்டதாகவும், செலவு இருந்தாலும் அது குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேலிலிருந்து குடிமக்களை மீட்க இரண்டாவது விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இன்னும் சிக்கித் தவிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் தங்களின் நிலையைப் பதிவு செய்ய Fil d’Ariane  தளத்தில் பெயர் பதிவு செய்வது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்
 

எழுத்துரு விளம்பரங்கள்