3 மாநிலங்களில் தேர்தல் நிறைவு: புதுச்சேரியில் அதிக ஓட்டுப்பதிவு
10 சித்திரை 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 192
அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 09) நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, கேரளாவில் 75.01, புதுச்சேரியில் 86.92%, அசாமில் 84.42% ஓட்டுப்பதிவாகி இருக்கிறது.
புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் இன்று (ஏப்ரல் 09) நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் செய்துள்ளனர். 3 இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
கேரளாவில் முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.
3 மாநில கள நிலவரம் குறித்து ஓர் சிறப்பு அலசல்!
புதுச்சேரி
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மொத்தம், 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி, தி.மு.க., - காங்., கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி நிலவியது. 9.50 லட்சம் வாக்காளர்கள் தகுதி உடையவர்கள். இவர்களில், 5 லட்சம் பேர் பெண்கள்; 4.46 லட்சம் பேர் ஆண்கள். 30 தொகுதிகளில், 294 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகம் ஆகும்.
கேரளம்
கேரளாவில், மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.32 கோடி பேர் ஆண்கள். 1.39 கோடி பேர் பெண்கள். 32,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 140 தொகுதிகளில், 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 75. 01 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
அசாம்
வடகிழக்கு மாநிலமான அசாமில், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம், 2.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.25 கோடி பேர் ஆண்கள்; 1.25 கோடி பேர் பெண்கள்; 318 பேர் மூன்றாம் பாலினத்தவர். ஓட்டுப்பதிவுக்காக, 31,490 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. . 126 தொகுதிகளில், 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 84.42 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan