பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சட்டபூர்வ தடை !
9 சித்திரை 2026 வியாழன் 12:23 | பார்வைகள் : 304
பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியைத் தடைசெய்யும் சட்டத்தை அந்நாட்டு பாராளுமன்றம் புதன்கிழமை (8 ) நிறைவேற்றியுள்ளது.
முன்னதாக மொஹம்மட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, பயங்கரவாத எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம்– 2026 அந்நாட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அதிகாரப்பூர்வ சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி, அக்கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. அதோடு, அரசியல் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவது, தேர்தல்களில் பங்கேற்பது, சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற தளங்களை பயன்படுத்துவது என அனைத்தும் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், கட்சியுடன் தொடர்புடைய அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இடைக்கால அரசாங்கம் அசல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தது. அந்த திருத்தத்தின் படி, எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால், அரசாங்கம் அவர்களின் அரசியல் அமைப்புகளை கலைக்க அதிகாரம் பெற்றுள்ளது.
இந்தச் சட்டம், பங்களாதேஷ் அரசியல் வரலாற்றில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுவதுடன், நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan