Paristamil Navigation Paristamil advert login

கோவையில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்தது அ.தி.மு.க. - எஸ்.பி.வேலுமணி

கோவையில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்தது அ.தி.மு.க. - எஸ்.பி.வேலுமணி

9 சித்திரை 2026 வியாழன் 10:18 | பார்வைகள் : 1085


தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செல்வபுரம் மற்றும் சொக்கம்புதூர் பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

அவருக்குப் பொதுமக்கள் பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “அ.தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில், 50 ஆண்டுகால வளர்ச்சியை கோவைக்கு கொண்டு வந்தோம்.

மேம்பாலங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மூலம் கோவையைத் தரம் உயர்த்தியது அ.தி.மு.க.தான். கோவைக்கு எந்தத் திட்டங்களையும் கொண்டு வராத தி.மு.க., கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த நல்ல திட்டங்களையும் முடக்கிவிட்டது” என்று குற்றம்சாட்டினார்.