Paristamil Navigation Paristamil advert login

14 ஆண்டுகளுக்கு பிறகு ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய பேயர்ன்

14 ஆண்டுகளுக்கு பிறகு  ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய பேயர்ன்

8 சித்திரை 2026 புதன் 16:35 | பார்வைகள் : 190


ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய பேயர்ன் அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய காலிறுதி போட்டியில், ரியல் மாட்ரிட் மற்றும் பேயர்ன் அணிகள் மோதியது.

சாண்டியாகோ பெர்னாபேயு மைதானத்தில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில், இடைவேளைக்கு முன்னதாக பேயர்ன் அணியின் லூயிஸ் டியாஸ் முதல் கோலை அடித்தார்.

கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வந்த ஹாரி கேன் இடைவேளைக்கு பின்னர் 17 வினாடிகளிலே அடுத்த கோலை அடித்து அசத்தினார்.

போட்டியின் 74-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்காக ஒரு கோலை அடித்தார்.

இதன் மூலம், பேயர்ன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஏப்ரல் 2012 க்குப் பிறகு முதல் முறையாக, பேயர்ன் முனிச் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதன் மூலம், இந்த தொடரில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெறாத (2 டிரா, 7 தோல்வி) நிலையை பேயர்ன் அணி முடிவுக்குக் கொண்டு வந்தது.

கிலியன் எம்பாப்பே இந்த UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் 10 ஆட்டங்களில் 14 கோல்களை அடித்துள்ளார். இது, 2021 - 22 தொடரில் ரியல் மாட்ரிட் வீரர் கரீம் பென்சிமா அடித்த 15 கோல்களுக்குப் பிறகு, ஒரே தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோல்களாகும்.