புதுச்சேரி, அசாம், கேரளாவில் நாளை ஓட்டு பதிவு!
8 சித்திரை 2026 புதன் 05:24 | பார்வைகள் : 197
யூனியன் பிரதேசமான புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில், நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. பரபரப்பாக நடந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதியை, கடந்த 15ல் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில், நாளையும்; தமிழகத்தில் 23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும், வரும் 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில், நேற்று மாலை 5:00 மணியுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம், 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி, தி.மு.க., - காங்., கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் ஓட்டு போட, 9.50 லட்சம் வாக்காளர்கள் தகுதி உடையவர்கள். இவர்களில், 5 லட்சம் பேர் பெண்கள்; 4.46 லட்சம் பேர் ஆண்கள். 30 தொகுதிகளில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆளும் கூட்டணியை ஆதரித்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
தி.மு.க., - காங்., கூட்டணியை ஆதரித்து, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். த.வெ.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் விஜயும் பிரசாரம் செய்தார்.
மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவி ல், மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொடர்ந்து இரண்டு முறை வென்ற இந்த கூட்டணி, மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்துள்ளது. இந்த முறை ஆட்சியை கைப்பற்றுவதில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி முனைப்புடன் உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan