துருக்கியில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - ஒருவர் சுட்டுக்கொலை, இருவர் கைது
7 சித்திரை 2026 செவ்வாய் 15:23 | பார்வைகள் : 233
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே பொலிஸாரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக இஸ்தான்புல் ஆளுநர் தாவூத் குல் (Davut Gül) தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் போது இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“எங்கள் பொலிஸாரின் விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையால் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது,” என ஆளுநர் அந்நாட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வேளையில், இஸ்ரேலிய தூதரகம் மற்றும் அங்கார நகரில் உள்ள பிரதான தூதரகங்களிலும் இஸ்ரேலிய இராஜதந்திரிகள் எவரும் இல்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலிய இராஜதந்திரிகள் முன்னதாகவே துருக்கியிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூதரகத்தில் அதிகாரிகள் இல்லாத சூழலில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துருக்கிய பொலிஸாரே தாக்குதலுக்கான பிரதான இலக்காக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, துருக்கியின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Mustafa Çiftçi, தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தாக்குதலாளிகள் இஸ்மித் பகுதியிலிருந்து வாடகை வாகனத்தில் இஸ்தான்புல் நகருக்கு வந்து இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து இஸ்தான்புல் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan