Paristamil Navigation Paristamil advert login

ருத்ரதாண்டவமாடிய ஃபர்ஹான் - 183 ரன் இலக்கை ஊதித்தள்ளிய சுல்தான்ஸ்

ருத்ரதாண்டவமாடிய ஃபர்ஹான் - 183 ரன் இலக்கை ஊதித்தள்ளிய சுல்தான்ஸ்

7 சித்திரை 2026 செவ்வாய் 14:56 | பார்வைகள் : 197


PSL 2026 போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராவல்பிண்டிஸ் அணியை வீழ்த்தியது.

ராவல்பிண்டிஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 14வது போட்டி நடந்தது.  

நாணய சுழற்சியில் வென்ற முல்தான் சுல்தான்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராவல்பிண்டிஸ் அணி முதலில் துடுப்பாடியது.

சாம் பில்லிங்ஸ் 56 (34) ஓட்டங்களும், கம்ரான் குலாம் 35 (24) ஓட்டங்களும் விளாச ராவல்பிண்டிஸ் அணி 182 ஓட்டங்கள் குவித்தது.  

பின்னர் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 16.2 ஓவர்களிலேயே 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சாஹிப்ஸதா ஃபர்ஹான் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார். ஜோஷ் பிலிப் 30 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார்.

4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபைஸல் அக்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.