Paristamil Navigation Paristamil advert login

தவளையும் எருதும்

தவளையும் எருதும்

18 வைகாசி 2023 வியாழன் 08:22 | பார்வைகள் : 12318


ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த குட்டை பக்கம் எந்த மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு தெரியாது.
 
அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும் ,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட தன்னோட வாய பலூன் மாதிரி ஊதி டப்புனு சத்தம் கொடுத்து பூச்சிகளை விரட்டும்.
 
ஒருநாள் அந்த குட்டை பக்கம் ஒரு எருது வந்துச்சு ,
 
உடனே அங்க இருந்த தட்டான் பூச்சிகள் எல்லாம் அந்த தவளைகிட்ட வந்து சொல்லுச்சுங்க இங்க பாத்தியா உன்ன விட மிகப்பெரிய மிருகம் ஒன்னு வந்திருக்கு ,உன்னோட பலத்த அந்த எருதுகிட்ட காமி போனு சொல்லுச்சுங்க
 
உடனே கோபமான தவளை அந்த எருதுக்கு முன்னாடி பொய் நின்னுச்சு ,அந்த எருதுக்கு இந்த சின்ன தவளை ஒரு பொருட்டாவே இல்ல.
 
அது அதுபாட்டுக்கு பக்கத்துல இருக்குற புல்ல மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு ,இத பாத்த தவளை எப்பயும்போல வாய பலூன் மாதிரி ஊதி சத்தம் கொடுத்துச்சு ,அந்த சத்தமும் எருத ஒன்னும் செய்யலைனு தெரிஞ்சதும்
 
வாய நல்லா குவிச்சு ஊத்திக்கிட்டே இருந்துச்சு ஒரு கட்டத்துல அதோட வலிமை அடங்கி டப்புனு தவளையோட உடம்பு வெடிச்சி போச்சு ,தான்கிற அகங்காரத்தோட இருந்த தவளை அப்படியே செத்துப்போச்சு
 
 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்