ஐபிஎல் வரலாற்றில் டெத் ஓவரில் யாரும் செய்யாத சாதனை படைத்த டிம் டேவிட்
6 சித்திரை 2026 திங்கள் 10:42 | பார்வைகள் : 173
ஐபிஎல் வரலாற்றில் டெத் ஓவரில் எந்த வீரரும் செய்யாத சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய RCB அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்கள் குவித்தது.
RCB தரப்பில், டிம் டேவிட் அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 70 ஓட்டங்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து, 251 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய CSK அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம், CSK அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் CSK அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது. முன்னதாக 2014 ஐபிஎல் தொடரில் CSK அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் 231 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும், ஐபிஎல் தொடரில் முதல்முறையாக CSK அணி 250 ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளது.
நேற்று RCB அணி மொத்தமாக 19 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் CSK அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்னதாக 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும், 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியும் 17 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
15வது ஓவரில் துடுப்பாட்டம் ஆட களமிறங்கிய டிம் டேவிட் 70 ஓட்டங்களுக்கு மேல் குவித்தன் மூலம் டி20 வரலாற்றில் 15 ஓவர்களுக்கும் மேல் துடுப்பாட்டம் ஆட களமிறங்கி அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம்பிடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறும் ப்ளாஸ்ட் T20 தொடரில், Sussex அணிக்கு எதிராக Daniel Sams 71 ஓட்டங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் டிம் டேவிட் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும், டெத் ஓவர் எனப்படும் 17 -20 ஓவர்களில் 68 ஓட்டங்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் எடுக்கப்பெற்ற அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan