தமிழகத்தில் பிரசாரம் செய்ய 6 முதல்வர்கள் வருகை: அ.தி.மு.க. கூட்டணி ஜெயிக்க பா.ஜ. வியூகம்
6 சித்திரை 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 456
சட்டசபை தேர்தலில் 6 மாநில முதல்வர்களை பிரசார களத்தில் இறக்கிவிட பா.ஜ. திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆறு மாநில முதல்வர்கள், தமிழகத்தில் பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷனில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இம்முறை தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, 4 முனை போட்டி உருவாகியுள்ளது. சிறிய கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை அடுத்து, பிரசாரம் களைகட்டுகிறது.
ஒவ்வொரு கட்சியும் தன் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷனில் கொடுத்து, அனுமதி பெற்றுள்ளன. \u003cbr\u003e\u003cbr\u003eதி.மு.க.வில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உட்பட 35 பேருக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் பழனிசாமி உட்பட 40 பேருக்கும், நாம் தமிழர் கட்சியில் சீமான் உட்பட 40 பேருக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.
பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி, தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி. முதல்வர் மோகன் யாதவ், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உட்பட 40 பேர் பிரசாரம் செய்ய அனுமதி பெறப்பட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி உட்பட, தேசிய, மாநில கட்சிகளை சேர்ந்த 888 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக, தமிழக தேர்தல் களத்தில் வலம் வர உள்ளனர்.
பா.ஜ.வினருக்கு மோடி அறிவுரை
புதுச்சேரியில் பிரசாரம் செய்து விட்டு, பிரதமர் மோடி நேற்று இரவு சென்னை வந்தார்; கிண்டி ஹோட்டலில் தங்கினார். பா.ஜ. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பியூஷ் கோயல், முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட 10க்கும் குறைவான நிர்வாகிகளே பங்கேற்றனர். பா.ஜ. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு, அனைவரும் முழுவீச்சில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் வீடு வீடாக சென்று, மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பிரசாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, அடுத்த நாள் கேரளம் செல்வதற்காகவே இரவு சென்னையில் தங்கினார். சென்னையில் அவர் பிரசாரம் செய்வதற்கான திட்டம் இல்லை. தி.மு.க. தவறான தகவல் பரப்பியது; அக்கட்சி செல்வாக்கை இழந்து விட்டது என்பதை இது காட்டுகிறது. - பியூஷ் கோயல் மத்திய அமைச்சர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan