வவுனியாவில் அதிர்ச்சி - புதைக்கப்ட்ட சடலத்திலிருந்து தலையை அகற்றிச் சென்ற நபர்கள்
4 சித்திரை 2026 சனி 19:36 | பார்வைகள் : 1785
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைகப்பட்டிருந்தது.
தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவிப்பதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.
அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்தபகுதியில் இருந்து துர்நாற்றம் வெளியாகியுள்ளது..
இதனையடுத்து பொதுமக்கள் சென்று அந்த பகுதியை பார்வையிட்டுள்ளனர். அதன் பின்னரே விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan