திவால் ஆகும் நிலையில் தமிழகம்: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
5 சித்திரை 2026 ஞாயிறு 09:45 | பார்வைகள் : 224
தமிழகத்தின் கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது. திவால் ஆகும் நிலையில் உள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை பாஜ வெளியிட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
இதன் பிறகு பியூஷ் கோயல் கூறியதாவது: தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்து கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம். தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. திவால் ஆகும் நிலையில் உள்ளது. உதயநிதி சபரீசன், கனிமொழி என குடும்பத்துக்காக அரசு நிதி பயன்படுத்தப்படுகிறது. அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்துகிறது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் தமிழகத்துக்கு கிடைக்கும் வருமானம் எங்கே செல்கிறது. தமிழக முதல்வரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் வருமானம் எங்கே செல்கிறது?
நிதியை பயன்படுத்துவதில் திமுக அரசு பொறுப்பின்றி நடந்து கொள்கிறது. ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு என்றார்கள். ஆனால், எதுவும் வரவில்லை. தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன? 50 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்துறை சிறப்பாக இருக்கிறது. நிர்வாக காரணங்களால் மாநிலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடன் இரு மடங்காக உயர்ந்தள்ளது. எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஊழல் அரசியல் செய்கிறது. இந்தாண்டு ரூ.76 ஆயிரம் கோடி தொகை வட்டி செலுத்துவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
அரசின் வருவாய் எல்லாம கடனை அடைக்கவே சரியாக உள்ளது
மத்திய அரசு கொடுத்த பணம் எங்கே போனது. மாநில அரசுகளிலேயே பொறுப்பற்ற அரசாக தமிழகம் இருக்கிறது.
வெளிநாட்டு முதலீடுகள் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்புகள் எங்கே போகின. அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணப்பலன்களை திமுக குடும்பம் அபகரித்து கொண்டது. ஊழல் செய்யும் திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
மதுவிற்பனை அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்திலும் கமிஷன் உள்ளது.டிஆர் பாலு, ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோர் ஊழல் வழக்கை எதிர்கொள்கின்றனர். ஆகப்பெரும் ஊழல்வாதிகளாக ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளனர். ஸ்டாலின் ஒற்றை குடும்ப ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். குடும்பத்தின் மீது நேரடியாக குற்றச்சாட்டு வைக்கிறேன். திமுகவை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஊழல் பணத்தை வைத்து வெற்றி பெறலாம் என திமுக எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan