Paristamil Navigation Paristamil advert login

தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு என்பதா? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கேள்வி

தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு என்பதா? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கேள்வி

5 சித்திரை 2026 ஞாயிறு 06:31 | பார்வைகள் : 355


தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு என்பதா? என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

அரசியல் தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு என்ற வார்த்தை பயன்படுத்துவது சலிப்பூட்டுகிறது. தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு என்பதா? கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் பலவீனமடைவதில்லை; மாறாக அதைப் பேசுபவர்கள் தன்னம்பிக்கை பெறுவர். புதிய கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்தை மதித்து அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கூறும் மொழி திணிப்பு வாதம், அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு  முயற்சியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் தங்களின் மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் தாய்மொழிககு முன்னுரிமை அளிக்கிறோம். ஒரு நல்ல கொள்கையை “கட்டாய ஹிந்தி” என்று தவறாக சித்தரிப்பதன் மூலம், நீங்கள் தமிழைப் பாதுகாக்கவில்லை; மாறாக, நமது இளைஞர்கள் பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கும் தடைகளை உருவாக்குகிறீர்கள். பன்மொழித்தன்மையை ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பது தவறானதாகும்.

தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பு கோட்பாடுகளை நிலைநிறுத்துவதோடு, தற்போதுள்ள இருமொழி அமைப்பின் வரம்புகளையும் நிவர்த்தி செய்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையில், காசி தமிழ்ச் சங்கம் முதல் உலக அரங்கம் வரை தமிழ் ஒரு தேசியப் பொக்கிஷமாகப் போற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளைக் கற்கத் தீவிரமாக ஊக்குவிக்கும் வேளையில், உங்கள் அரசு பிரிவினைவாத வாக்கு வங்கிப் பிரசாரத்திற்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

வளங்கள் பற்றிய பேச்சு வெறும் வெளிவேஷமே. தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதாக உறுதியளித்த பின்னரும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அதனைத் தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், உங்கள் அரசு கல்வி சமத்துவத்தை விட அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றின் அமலாக்கத்தைத் தொடர்ந்து தடுத்து வருகிறது.

நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக ஹிந்தித் திணிப்பு வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.