Paristamil Navigation Paristamil advert login

வாய்க்கொழுப்பை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்; முதல்வர் ஸ்டாலின்

வாய்க்கொழுப்பை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்; முதல்வர் ஸ்டாலின்

5 சித்திரை 2026 ஞாயிறு 05:24 | பார்வைகள் : 335


தமிழக மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பாங்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டாங்க என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைவரும் சூரிய உதயத்தை பார்க்க மக்கள் எல்லாம் வரக்கூடிய மாவட்டம்தான் இந்த குமரி மாவட்டம். அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு உதயசூரியன் ஆட்சி உதிக்க வேண்டும் என்று ஆதரவு கேட்டு உங்களையெல்லாம் நான் பார்க்க வந்திருக்கிறேன்.

குமரிக்கு நான் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஓடோடி வந்து பார்த்திருக்கிறேன். அதேபோல் 2025 புது வருடம் அன்று, அதற்கு முதல்நாளே நம்முடைய திருவள்ளுவர் சிலையினுடைய வெள்ளி விழா கொண்டாட இங்கேதான் நான் வந்தேன். வரும் தேர்தலில் திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த  நீங்க ரெடியா?

மதுரை எய்ம்ஸ், கோவை, மதுரை மெட்ரோ ரயில், ஓசூர் விமான நிலையம், பேரிடர் நிவாரண நிதி, பள்ளிக் கல்வி நிதி, கீழடி ஆய்வறிக்கை, தொகுதி மறுவரையறையில் உரிய நியாயம், நிதிப் பகிர்வுல தமிழகத்திற்கு உரிய பங்கு, தமிழகத்திற்கு மறுக்கப்படக்கூடிய புதிய ரயில்வே திட்டங்கள்.

இப்படி தமிழகம் சார்பில் பிரதமர் மோடி கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கு. இதெல்லாம் நான் தொடர்ச்சியா கேட்கிற கேள்விகள். இதுக்கெல்லாம் பதில் இருக்கா? இல்ல. இப்போ புதுசா ஒரு பிரச்னை கிளம்பியிருக்கு. என்ன தெரியுமா? சிறுபான்மையின மக்கள், சிறுபான்மையின மக்களைக் குறிப்பா கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவச்சு அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கு.

என்னன்னா, வெளிநாட்டு நிதிப் பங்களிப்புச் சட்டத் திருத்தம். இதுக்காகவும் தமிழகத்தில் இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன். தமிழக மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பாங்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டாங்க. இபிஎஸ்  சொல்வதற்கு சாதனைகள் இல்லை, மக்கள் பட்ட வேதனைகள்தான் இருக்கு.

பாஜவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துணிச்சலில்லை. அவருக்கு உதவியவர்கள் மேலேயே நன்றி உணர்ச்சி இல்லாமல் மனசு முழுக்கத் துரோகம் செஞ்ச நஞ்சுதான் இருக்கு.

இப்படிப்பட்ட இவர் கொடுக்கிற வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை. இந்தத் தேர்தல் களத்துல இறங்கியிருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார்தான் திமுக தேர்தல் அறிக்கை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.