Paristamil Navigation Paristamil advert login

புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை; விஜய் வாக்குறுதி

புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை; விஜய் வாக்குறுதி

4 சித்திரை 2026 சனி 14:48 | பார்வைகள் : 154


புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் விஜய் பேசியதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் உங்கள் எல்லோருக்கும் வணக்கம். காலையில் சாப்பிட்டீர்களா? புதுச்சேரியில் நாம் போட்டி போடுகிறோம். நம்முடன் சேர்ந்து 2 தொகுதிளில் கூட்டணி கட்சி போட்டி போடுகிறது.

நமது  கட்சி வேட்பாளர்கள் பற்றி உங்களுக்கு தெரியும். மக்களோடு மக்களாக நிற்பவர்களை தான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன். புதுச்சேரி வேட்பாளர்களை தேர்வு செய்து உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். உங்கள் தேவைகள் நிறைவேற துணை நிற்போம். அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தவெக முதல் முறையாக புதுச்சேரியில் போட்டி போடுகிறது. காங்.,திமுக பேருக்கு தான் கூட்டணி; சில தொகுதிகளில் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தான் நிற்கிறார்கள்.     தமிழகத்திலும் திமுக, காங்கிரஸ் குழப்ப அணியாக தான் இருக்கிறது.     புதுச்சேரியிலும் அதே மாதிரி குழம்பி போன அணியாக தான் இருக்கிறது.

eஎன்ஆர்காங்-பாஜவும் சேர்ந்த கூட்டணி அல்ல. சேர்ந்து இருக்க முடியாமல்     சோர்ந்து போன கூட்டணி. தமிழகத்தில் இரண்டு மறைமுக கூட்டணி வைத்து     இருக்கிறார்களோ, அதே பார்முலா தான் புதுச்சேரியிலும். நாம் தனித்து போட்டியிடுவதன் மூலம் யாருடனும் உறவாடவில்லை என்பது தெரிந்துவிட்டது.

நாம்     மக்கள் பக்கம் நிற்கிறோம், மக்கள் நமது பக்கம் நிற்கிறார்கள்.     புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம்.      Election என்பது Exam பேப்பரா? Election மக்கள் சம்பந்தப்பட்டது. மக்கள்     கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தான் தில் வேணும். இங்கே ஏற்கனவே     அரசியலில் உள்ளவர்களுக்கு மக்களிடம் பதில் சொல்ல தெரியவில்லை.

ஏமாற்று     கூட்டணிக்களுக்கு, பொருந்தா கூட்டணிகளுக்கும், ஓட்டை உடைசலாக இருக்கும்     கூட்டணிகளுக்கும் ஓட்டு போட்டு தயவு செய்து ஏமாந்து விடாதீர்கள்.     தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும்; அதுபோல் புதுச்சேரியிலும் அமையணும்; ஒரு     விரல் புரட்சியான விசில் புரட்சியை உருவாக்குங்கள். இவ்வாறு விஜய்     பேசினார்.