"பிரெஞ்சு உரிமையாளர்" என்று அறிவித்து ஹோர்முஸ் நீரிணையை கடந்த CMA CGM கப்பல்!!
3 சித்திரை 2026 வெள்ளி 17:00 | பார்வைகள் : 3785
பிரான்சின் CMA CGM நிறுவனத்திற்குச் சொந்தமான Kribi என்ற கெண்டெய்னர் கப்பல், « propriétaire français » என்று தனது சிக்னலில் காட்டிக்கொண்டு détroit d’Ormuz வழியாக வளைகுடாவிலிருந்து வெளியேறியது.
MarineTraffic தரவுகளின்படி, அது மஸ்கட் அருகே பாதுகாப்பாக சென்றது.
இந்தப் பாதை மத்திய கிழக்கு போரின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பெரிய ஐரோப்பிய கடல் போக்குவரத்து நிறுவனத்தின் கப்பல் இந்த வழியாக சென்றது மிகவும் அரிதான சம்பவமாக கருதப்படுகிறது.
கப்பல், ஈரான் அருகிலுள்ள île de Larak தீவு வழியாகச் சென்றது. இந்தப் பாதையை Gardiens de la Révolution அமைப்பு கட்டுப்படுத்துகிறது, மேலும் “அங்கீகரிக்கப்பட்ட கப்பல்கள்” மட்டுமே செல்ல அனுமதி உள்ளது. இந்த வழியைப் பயன்படுத்த கப்பல்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
சாதாரண காலங்களில் உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தக் கடல் வாயிலூடாக செல்கிறது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல்மற்றும் ஈரான் இடையேயான போரால் இந்தப் பாதை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan