அரசு பேருந்து, ரயிலில் இலவச பயணம் - பாகிஸ்தான் மாகாணம் அறிவிப்பு
3 சித்திரை 2026 வெள்ளி 16:23 | பார்வைகள் : 1281
30 நாட்களுக்கு பொது போக்குவரத்தில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அறிவித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எரிபொருள் வழங்கல் பாதையான ஹார்மோஸ் நீரிணை முடக்கபட்டுள்ள நிலையில், பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வது, பள்ளி கல்லூரி வகுப்புகளை இணைய வழியில் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதல் மலேசியாவும், 8 கிமீ க்கு அதிகமான தொலைவில் இருந்து வரும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என கட்டுப்பாடு விதித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது.
இதனை மக்கள் சமாளிக்கும் வகையில், இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் 30 நாட்களுக்கு பொது போக்குவரத்தில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என பாகிஸ்தான் சையத் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவாரண செலவை ஈடுகட்ட சுமார் ரூ.350 மில்லியன்(இந்திய மதிப்பில் ரூ.11.65 கோடி) உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யும் என அறிவித்துள்ளார்.
மாகாணம் முழுவதும் உள்ள பயணிகள் ஆரஞ்சு லைன் ரயில், மெட்ரோ பேருந்து, ஸ்பீடோ பேருந்து மற்றும் பசுமை மின்சாரப் பேருந்து சேவைகளில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், இதற்கு மக்களிடையே நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளதோடு, தனிநபர் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பாரிய அளவிலான மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் போது எரிபொருள் மிச்சமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan