புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
4 சித்திரை 2026 சனி 06:45 | பார்வைகள் : 891
புதுச்சேரியில் பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்தி தேஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதில், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. 30 தொகுதிக்கான தேர்தல் களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். ஓட்டு பதிவிற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் புதுச்சேரி வர உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் களை கட்டியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். அஜந்தா சிக்னலில் துவங்கிய ரோடு ஷோ ராஜா தியேட்டர் சிக்னலில் நிறைவு பெறுகிறது.
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த ரோடு ஷோவில், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாலையின் இருபுறமும் கூடிய தேஜ கூட்டணி தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள், மோடி, அவர்களை நோக்கி கையசைத்தபடி வரவேற்பினை ஏற்றுக்கொண்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan