வெளிநாட்டு நிதி சட்ட திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
3 சித்திரை 2026 வெள்ளி 12:24 | பார்வைகள் : 196
வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை, பிரதமர் மோடி எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட முன்வரைவு என்ற பெயரில், பா.ஜ., அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள், முழுக்க முழுக்க கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், மத சிறுபான்மை தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து தொடுக்கப்படும் நேரடி தாக்குதல்.
ஏற்கனவே வக்பு வாரிய சட்ட திருத்தம் வாயிலாக இஸ்லாமிய சொத்துக்களை கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மத சிறுபான்மையின அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ., அரசு இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் தேர்தல் நடக்க இருப்பதாலும், இப்போதைக்கு பின்வாங்குவது போல் நடித்து, விரைவில் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டி, இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ., அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.
இந்த முயற்சிகளை கைவிட்டு, பிரதமர் மோடி இந்த தன்னிச்சையான அநியாய சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்தும், ''சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை முடக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan