9 வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !
2 சித்திரை 2026 வியாழன் 14:45 | பார்வைகள் : 1349
இணைய வழியிலான நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்னணு உபகரணங்களுடன், 09 வெளிநாட்டவர்கள் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-468 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஒரு குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில், Green Channel ஊடாக இவர்கள் வெளியேற முயன்றபோது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 70 நவீன ரக கையடக்கத் தொலைபேசிகள், 08 சிறிய கணினிகள், 54 சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan