சிக்காடா கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
2 சித்திரை 2026 வியாழன் 09:30 | பார்வைகள் : 1259
சிக்காடா என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய மரபணு மாறுபாடு ஒன்று உலக நாடுகள் பலவற்றில் பரவிவருகிறது.
சிக்காடா என அழைக்கப்படும் BA.3.2 வகை கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றில் பரவிவருவதாக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தை மையமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மாறுபாடு, தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த மரபணு மாறுபாடு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால், இது தற்போதுள்ள நோயெதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
என்றாலும், இந்த புதிய மாறுபாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்த நோய்த்தொற்றின் அளவு குறைவாகவே உள்ளது, இருப்பினும், நாட்டின் பல பகுதிகளில் சிக்காடா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், முந்தைய கோவிட் காலகட்டத்தில் செய்ததுபோலவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், கைகளைக் கழுவவும், உடல்நிலை சரியில்லாதபோது வீட்டிலேயே இருக்கவும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan