தோல்வி பயத்தால் காங்கிரசுடன் திமுக கூட்டணி: இபிஎஸ்
2 சித்திரை 2026 வியாழன் 12:56 | பார்வைகள் : 157
தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி, ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சிவகங்கையில் பிரசாரம் செய்த இபிஎஸ் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி சங்கியாக மாறிவிட்டார் என்கிறார் ஸ்டாலின். அவதூறு கருத்தை சொல்கிறார். தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்திருக்கிறீர்கள். உங்க அப்பா கருணாநிதி சங்கி என்று ஒப்புக்கொள்கிறாரா? கருணாநிதி யாரோடு இருக்கிறார்? (போட்டோ காண்பிக்கிறார்) வாஜ்பாயோடு இருக்கார். உண்மையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிரச்னை. கனிமொழி டில்லிக்கு சென்று பார்த்தார். அப்படி என்றால் ஸ்டாலின் சகோதரி கனிமொழி சங்கியா? உங்கள் பதவிக்கு தக்கவாறு பேசி பழகுகுங்கள் எங்கள் தொண்டன் பேசத் தொடங்கினால் செவி கிழிந்துவிடும்.
இபிஎஸ் கையில் ரத்தக்கறை படிந்திருக்கிறதாம், புதிதாகக் கண்டுபிடித்திருக்கார், என் கை சுத்தமாக இருக்கு பாருங்கள். கோவில் காவலாளி அஜித்குமார் மீது பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்துள்ளனர். இதுதான் ரத்தக்கறை படிந்த கை. மானாமதுரையில் லாக்கப் டெத், இதுதான் ரத்தக்கறை படிந்த கை. ஸ்டாலின் திட்டமிட்டு அதிமுகவை பற்றி அவதூறு பேசுகிறார். தினமும் போட்டோ ஷூட் நடத்துவார் ஸ்டாலின், இதுதான் நடக்கிறது. வேறு எந்த சாதனையும் இல்லை. திட்டத்துக்கு பேர் வைப்பதில் நோபல் பரிசு கொடுக்கலாம். 52 குழு அமைத்து, தலைவர் போட்டாச்சு. ஆனால், எதுவும் செயல்படவில்லை.
நம்மைப்போல ஏழ்மையில் வாழ்ந்தால்தான் பணத்தின் அருமை தெரியும். அவர்கள் ஊதாரித்தனமாக செலவழிக்கிறார்கள். பிரச்னையை தீர்ப்பதற்கு செலவு பண்ணுங்கள். புதிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். நாம் அவர் அறிக்கையை பார்த்து காப்பி அடித்தோம் என்கிறார். 2021ல் முதலில் அதிமுக தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அரை மணிநேரம் கழித்துதான் திமுக தேர்தல் அறிக்கை வந்தது. அப்போதே எல்லா மகளிர்க்கும் 1500 என்று அறிவித்தோம், அவர்கள் 1000 என்று சொன்னார்கள். நாங்கள் காப்பியடிக்கவில்லை, நம் அறிக்கையைப் பார்த்து திமுகதான் காப்பியடித்தது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
சிவகங்கையில் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் இபிஎஸ் பிரசார வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
புதுக்கோட்டையில் நடந்த பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது:தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று ஸ்டாலின் பேசுகிறார். பாவம், முதல்வருக்கு எதுவும் தெரியாது. அந்தக்காலத்தில் அரசர் வெளியே வரமாட்டார், அமைச்சர்களிடம் கேட்டால் மாதம் மும்மாரி மழை பெய்கிறது என்பார்கள். அதுபோல அரசு அதிகாரிகளைக் கேட்டு, அரசு நடத்தும் முதல்வர் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்காம், நாடே சந்தி சிரிக்குது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை.
கரூர் மாவட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார், செந்தில்பாலாஜி இருப்பதால் வெற்றி பற்றி கவலைப்படப் போவதில்லையாம். அவர்தான் ஆப்பு வைக்கப் போகிறார். மக்கள் சரியான ஆப்பு வைப்பார்கள். அண்ணாதுரை உருவாக்கிய திமுக இன்று கருணாநிதி குடும்பத்தின் கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஆகியோர் அதிகார மையம். யாரெல்லாம் பி டீம் என்பது தெரிந்துவிட்டது, அவரையெல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார். அதிமுகவை அழிக்க நினைத்தவர் தான் அழிந்துபோவார்.
அதிமுக ஆபீஸ் டில்லியில் இருக்கிறதாம், கண்ணு தெரியலைன்னா வாங்க, நான் காட்டுகிறேன் சென்னையில்தான் இருக்கிறது. தேர்தல் எங்கு நடக்கிறது? தமிழகத்துக்கும் தே ஜகூட்டணிக்கும் தேர்தலாம். இது சட்டமன்றத் தேர்தல். அதிமுக தலைமை தாங்குகிறது. அதிமுகதான் ஆட்சி அமைக்கும். இதை அமித்ஷாவே நேரடியாக வந்து அறிவித்தார். அப்புறம் என்ன உங்களுக்கு சந்தேகம்?
நம்மை பற்றி பேச சரக்கு இல்லை. கூட்டணி பிரச்னை யாருக்கு இடையே நடந்தது? காங்கிரஸ் தலைமை அலுவலகம் டில்லியில் தான் இருக்கிறது. இண்டி கூட்டணி காணாமல் போய்விட்டது. ஸ்டாலின் தலைமையில் நிறைய கட்சிகள் இருக்கிறதாம். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விளம்பரத்திலேயே ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின்.
ஏற்கெனவே இருந்த கூட்டணிதான் திமுகவுடன் இருக்கிறது. புதிதாக அரை பெர்சன்ட் ஓட்டு போய் சேர்ந்திருக்கிறது. அது ஐசியூவில் இருந்தது, வெண்டிலேட்டர் வைத்து போராடியபோது உயிர் கொடுத்தது அதிமுக. அது அங்கு போய்விட்டது. வேறு எந்தக் கட்சியுமில்லை.
ஆனால் அதிமுகவிடம் அமமுக வந்து சேர்ந்திருக்கிறது. சிறிய கட்சி, பெரிய கட்சி என பிரித்துப் பார்க்கவில்லை, எல்லாம் சேர்ந்து மக்கள் விரோத திமுக கூட்டணியை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan