Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல சங்கம் அறிவிப்பு

தி.மு.க.,வுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல சங்கம் அறிவிப்பு

2 சித்திரை 2026 வியாழன் 10:37 | பார்வைகள் : 1035


சட்டசபை தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், மீனவர் அமைப்புகள், தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தென்னிந்திய மீனவர் நல சங்கம் சார்பில், 'வரும் தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம்' என, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இது குறித்து, தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் பாரதி கூறியதாவது:

கடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில், ஒரு மீனவருக்கு மட்டுமே, தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தோம். நடக்கவில்லை. தற்போது தி.மு.க., அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில், மீனவர் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவருக்கு வாய்ப்பு அளிக்காத தி.மு.க.,வை புறக்கணித்து, மாற்று கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.